Pages

Wednesday, March 26, 2014

சூரிய ஒளி மின்சாரம்பகுதி.1

பூமியின் வெப்ப நிலை மாறுபட்டு வருவதால் பருவ மழை இப்பொழுது பொய்த்து வருகிறது. அதனால் நீர் தேக்கங்கள் மூலமாக தண்ணீரின் விசையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் (Hydro Power Plant) மின் உற்பத்தி குறைந்து வருகிறது.

         நிலக்கரியை கொண்டு நீரை சூடாக்கி, நீராவியின் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் அணல் மின் நிலையங்களில் (Thermal Power Plant) தயாரிக்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் நிலக்கரி அமுத சுரபி போல தோண்ட தோண்ட கிடைத்துக்கொண்டே இருக்கப்போவதில்லை. ஒரு கால கட்டத்தில் முற்றிலுமாக இல்லாமல் போய்விடும். அதனால் இம்முறையிலும் தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய இயலாது.

         அணுமின் நிலையங்கள் (Atomic Power Plant) மூலம் உற்பத்தி செய்யும் பொழுது தடையில்லா மின்சாரம் கிடைக்க வாய்ப்பிருந்தாலும், ஆபத்து அதிக அளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதுடன், விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிப்படைய கூடும். தொழில் நுட்பத்திலிலும்  பொறுப்புடன் செயல்படுவதிலும் சிறந்த மேலை நாடுகள் கூட, இத்திட்டத்தை கைவிட்டு வருகிறது.

          இயற்கைக் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரத்தை பெறக்கூடிய, சூரிய ஒளி மின்சாரமே எதிர்காலத்தில் நிலைத்து இருக்கும். இம்முறை எளிதானது. ஆபத்தில்லாதது, செலவில்லாதது. நம் தேவைக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். சூரிய ஒளி மின்சாரம் பற்றி முழுமையாக தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் புத்தகங்கள் இல்லை. எனவே சூரிய ஒளி மின்சாரத்தை பற்றியும், அதை உற்பத்தி செய்யும் முறை பற்றியும் தெளிவான விளக்கப்படங்களுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தொடர் பதிவாக பதிவிட முடிவு செய்துள்ளேன். இதன் தொடர்ச்சி பல பதிவுகளாக வெளிவரும். உங்கள் சந்தேகங்களை பின்னூட்டம் மூலமாக கேளுங்கள்.

First post

test msg
 

Blogger news

Blogroll

About